அஞ்சலோ மெத்யூஸ் , தினேஷ் சந்திமால் சதம் – இலங்கை அணி முதல் இனிங்ஸில் 506 ஓட்டங்கள்!

Thursday, May 26th, 2022

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 506 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 80 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 58 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், எபடோட் ஹொசைன் 148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முதலில், தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகர் ரஹீம் 175 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களையும் பெற்றனர்.

000

Related posts: