அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் இருப்பதுதான் இலங்கையின் பலம் – சொல்கிறார் டுபிளசி!

Thursday, December 15th, 2016

இலங்கை கிரிக்கெட் அணியில் சில அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணிக்கு பலம் என்று தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் டுபிளசி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு பயணமாகியுள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி Port Elizabeth, St George’s Park மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி கூறுகையில், “இலங்கை கிரிக்கெட் அணியை குறைத்து மதிப்பீடு செய்ய மாட்டோம்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் போலவே இந்த தொடருக்கும் தயார் செய்கிறோம். பெரிய தொடர், சிறிய தொடர் என்று எல்லாம் பார்ப்பது கிடையாது.

நாங்கள் இலங்கையை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் மக்கள் விருப்பம். ஆனால் அது எளிதாக இருக்காது.

சமீப காலமாக இலங்கை அணி சிறப்பான ஒரு ஆட்டத்தை ஆடி வருகிறது. அந்த அணியில் சில முக்கிய வீரர்கள் இல்லாதது எங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும்.

அவர்கள் அச்சுறுத்தும் சுழல்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளனர். ஆனால் பந்து அதிகமாக சுழலாலது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

du_plessis_001

Related posts: