3,600 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கல்லறை கண்டுபிடிப்பு!

Sunday, January 15th, 2017

எகிப்தில் Gebel el Silsila பகுதியில் 3600 ஆண்டுகளாக மறைந்து கிடக்கும் பண்டைய கால எகிப்திய கல்லறையை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் பண்டைய காலத்தில் வாழ்ந்த குடும்பங்கள், குழந்தைகள், அதைத் தொடர்ந்து முதலைகள் மற்றும் ஆடுகள் போன்றவை இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதை Lund பல்கழைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 3600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குடும்பங்கள் இருந்துள்ளது. இது மூன்றாம் ஆட்சிக்காலத்தில் அல்லது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.

இதைப் பார்க்கையில் அவர்கள் கடினமான உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பது போல் தெரிகிறது என கூறியுள்ளனர்.மேலும் இங்கு கோபுரங்கள் போன்றவை எல்லாம் காணப்படுகிறது, அதனால் கண்டிப்பாக பொதுமக்கள் மற்றும் விலங்குகள் வாழ்ந்திருக்கிலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனால் தற்போது ஒரு தலை இல்லாமல் முதலையின் எலும்புகூடு மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அங்கு சடலங்கள் மற்றும் எகிப்திய கடவுளின் புகைப்படமும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: