வருகிறது கோகோ கோலா நிறுவனத்தின் மதுபானம்!

Thursday, May 31st, 2018

குளிர்பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் கோகோ கோலா நிறுவனம் தன் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது.

125 ஆண்டுகள் பழைமையான இந்நிறுவனம் ஜப்பானில் மதுபானத்தை அறிமுகம் செய்தது. இந்த பானம் எழுமிச்சை மணத்துடன் இருப்பதோடு, ஆல்கஹால் அளவு 3 முதல் 7 சதவீதம் இருக்கும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் சூகி நிறுவனத்துடன் இணைந்து இந்த மதுபானம் விற்பனையில் இறங்கியுள்ளது. பீருக்கு போட்டியாக இந்த மதுபானம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜப்பானுக்குவெளியே இந்த பானத்தை விற்க திட்டம் இல்லை என்றும் கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 350 மில்லி லிட்டர் கேன் 1.40 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.93 ஆகும்.

Related posts: