வருகின்றது செயற்கை எலும்பு தொழில்நுட்பம் – 10 ஆண்டுகளில் எலும்புப் பிரச்சனைகளுக்கு தீர்வு!கிடைக்க வாய்ப்பு!

Saturday, April 15th, 2017

இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் ஆய்வகங்களில், அதிர்வுகளைக் கொண்டு செயற்கை எலும்புகளை உருவாக்கும் தொழிநுட்பத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பிண்ணும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல்.

பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது.

அவர்களது 2016-ம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இவை, ஆய்வுக் கூடங்களைத் தாண்டி, மனித வாழ்க்கையில், சோதித்துப் பார்க்கத் தயாராகிவிட்டன. அதில் ஒன்று தான் எலும்பும் புரட்சி

இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் ஆய்வகங்களில், அதிர்வுகளைக் கொண்டு செயற்கை எலும்புகளை உருவாக்கும் தொழிநுட்பத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பம் “நானோ கிக்கிங்” என்று அழைக்கப்படும்; அதில் எலும்பு மச்சைகளிலிருந்து குருத்தணுக்களை எடுத்து அதனை உயர் அதிர்வலைகளுக்குள்ளாக்கி அதை வெவ்வேறு எலும்பு உருவாக்கும் அணுக்களாக மாற்றப்படும்.

பக்க விளைவுகளற்ற ரசாயனங்கள் மற்றும் வளர்ச்சி புரதங்கள் இல்லாமல் நோயாளிகளின் சொந்த அணுக்களில் இருந்து புதிய எலும்புகளின் துண்டுகள் உருவாகிறது. அறுவை சிகிச்சைகள் மூலம் உடலின் பிற பகுதிகளிலிருந்து எலும்பு மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. மேலும் புதிய திசுக்களை புறக்கணிக்கும் ஆபத்தும் இல்லை.

20 மீட்டர்கள் அளவில் அணுக்களை சுழற்றி, இந்த சிறிய “நானோகிக்ஸ்”, ஒரு நொடிக்கு ஆயிரம் முறைகள் நடைபெறுகிறது.

“இயற்கையாக ஒரு நொடிக்கு ஆயிரம் முறை அதிரும் எலும்புகளை நாங்கள் உயிரியல் ரீதியாக உருவாக்குகிறோம்” என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஸ்காட்லாந்து அணியில் உள்ள பேராசிரியர் மாதியு டால்பி தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே இருக்கும் எலும்புடன் இணைய பொருத்தப்படும் அல்லது எலும்பு சேதங்களை சரிசெய்யும். சில சமயங்களில் இந்த நேனோ கிக் முறையை நோயாளிகளுடன் நேரடியாக செய்ய முடியும். மேலும் எதிர்காலத்தில் வளர்ந்து வரும் எலும்பு புற்று நோய்களை தடுக்கவும் உதவும்.

இரத்தத்திற்கு அடுத்து எலும்புகள்தான் அதிகமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது எனவே “நானோ கிக்கிங் புரட்சியின்” தாக்கம் மிக அதிகமானதாக இருக்கும். இதற்கான தேவைவயதானவர்களாலும் அதிகரிக்கப்படுகிறது. அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பு முறிவுகளால் பாதிக்கப்படுவதே இதற்கான தேவையை அதிகரிக்கிறது.

இந்த ஆய்வுக் குழு, அடுத்த மூன்று வருடங்களில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட எலும்புகளை மனித உடலில் பொருத்தி சோதனை செய்ய உள்ளது; மேலும் இந்த ஆய்வின் மூலம் எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கான நிவாரணங்கள் குறைந்தது 10 வருட காலங்களில் நமக்கு கிடைக்கும்.

Related posts: