மன அழுத்தம் இருதய நோய்க்கு வழிவகுக்ம் – மருத்துவர்கள் கண்டுபிடிப்பு!

தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு மிகவும் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மூளையில் பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு எதிர்வினையாற்றும் பகுதியில் அதிக செயல்பாடு இருக்கும் பட்சத்தில் அது எலும்பு மஜ்ஜை பகுதியில் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன் காரணமாக இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாள்ரகள், சுமார் நான்கு ஆண்டுகளாக 300 பேரின் மூளைகளை ஸ்கேன் மூலம் நுட்பமாக கண்காணித்துள்ளனர். மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பானது தி லேன்சட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
குழந்தைகளின் கண்பார்வையை காக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு!
புதிய ஆண்டு பயணத்தை ஆரம்பித்து கடந்த ஆண்டில் தரையிறங்கிய விமானம்!
பல பவுண்ட் எடையினையும் நகர்த்தும் சிறிய ரோபோ!
|
|