பென்டகனின் திட்டப்படி விண்வெளியில் ஆயுதங்கள் – அமெரிக்கா!

Thursday, January 18th, 2018

அமெரிக்காவின் பாதுகாப்பை மேம்படுத்த ஏவுகணைகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா விண்வெளியில் நிலைநிறுத்தத்திட்டமிட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தளமான பென்டகன் அது தொடர்பான நகர்வுகளில் இறங்கியுள்ளது.

இந்தத்திட்டம் சாத்தியப்பட்டால் எதிரி நாடுகள் தாக்குதல் மேற்கொண்டால் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் மூலம் அதனை இடைநிறுத்த முடியும்.

இந்தத்திட்டத்துக்க ரஷ் யா கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.

எந்த ஒரு நாட்டையும் தாக்கும் வகையில் விண்வெளியில் ஏவுகணைகளை நிலை நிறுத்தவது பற்றி அமெரிக்க இராணுவத்தளமான பென்டகன் முயற்சிகளை மேற்கொண்ட வருவது குறித்து ரஷ்ய அயலுறவுத்துறை அமைச்சர் “செர்ஜி லாரவ்” மொஸ்கோவில்; தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

 அமெரிக்காவின் இந்தத்திட்டத்துக்கு இந்தியாவும் தனது எதிர்ப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Related posts: