நாம் ஏமாற்றப்படுகின்றோமா?

Sunday, November 20th, 2016

விமானத்தை கண்டு பிடித்தது யார்? இந்தக் கேள்விக்கு பதில் என்ன?  விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் சிறுபிள்ளையும் சொல்லிவிடும் இந்த பதிலை. ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இவர்கள் இருவர் தான் எந்திரப்பறவையை உருவாக்கியவர்கள் இதனை வரலாறு ஏற்றுக் கொண்டது.

ஆனாலும் ஆய்வாளர்கள் ரைட் சகோதரர்கள் விமானத்தினை கண்டு பிடிக்கும் முன்னரே வேறு சிலர் கண்டு பிடித்து விட்டார்கள் என்கின்றார்கள். சற்று குழப்பமாக இருக்கின்றதா ஆய்வாளர்கள் கூறும் ஆதாரங்கள் இதோ.

எமது வரலாற்று புராண கதைகளில் பறக்கும் விமானங்களில் தேவர்கள், அசுரர்கள் மற்றும் கடவுள்கள் போன்றோர் பறந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்படி எனில் இயந்திரப்பறவை 20ம் நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது தானே.

அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்றால் பண்டைய எகிப்து இராச்சியத்திலேயே விமானங்கள் உருவாக்கப்பட்டு விட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கான ஆதாரங்கள் எகிப்தில் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அத்தோடு தங்க மொம்மைகள் போன்றவற்றின் மூலம் அக்காலத்திலேயே விமானங்கள் இருந்தமைக்கான ஆதாரத்தினை நிரூபித்து காட்டுகின்றது.

தற்போது பாவனையில் உள்ள விமானங்களைப் போல் அச்சு அசலாக அவை உருவாக்கப்பட்டது எப்படி அப்படியாயில் ரைட் சகோதரர்கள் காப்பி பண்ணியவர்களா? அவர்களுக்கு முன்னர் விமானத்தை எகிப்தியர்கள் உருவாக்கினார்கள் என்றால் இல்லை அவர்களும் காப்பி அடித்தவர்கள் தான்.

அவர்களுக்கும் முன்னர் மர்மமான முறையில் விமான தளங்கள் பூமியில் அமைக்கப்பட்டு தான் இருக்கின்றது. மாயன் இனக் கலாச்சாரம் இருந்த போதும் விமானங்கள் பாவிக்கப்பட்டன என்பதும் ஆய்வாளர்கள் அடித்துக் கூறும் உண்மைகள்.

இவை அனைத்தும் பழைய கதை என்றால் ரைட் சகோதரர்களுக்கு முன் ரிச்சட் பியர்ஸ் எனும் நியூசிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி 1903ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி விமானத்தை கண்டு பிடித்தார்.

பின்னர் அதே ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி தனது விமானத்தை சோதனைக்காக அனைவரின் முன்னிலையில் பறக்க வைத்தார். ஆனாலும் பரிதாபம் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி சோதனை முயற்சி தோல்வியை தழுவியது.

அதன் பின்னர் 1903ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ரைட் சகோதரர்கள் 30 மைல் வேகத்தில் பூமிக்கு மேல் பறந்து காட்டி பெருமையை பெற்றதோடு வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.

ஆக ரைட் சகோதரர்களுக்கு முன் ரிச்சட் அதற்கு முன் பலபேர் உண்மையில் யார் தான் கண்டு பிடித்தார்கள் எங்கிருந்து வந்தது விமான தொழில் நுட்பம்? ஆண்டாண்டாக ஏமாற்றி வருகின்றார்கள் எப்போது தான் பதில் கிடைக்கும்.

மனித காலாச்சாரம் பூமியில் தடம் பதிக்க முன்னரே பூமியில் விமானங்கள் வந்து சென்றதற்கு ஆதாரங்கள் உள்ளன, குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் விமானங்கள் போன்ற வடிவத்தை சுவர்களில் வரைந்துள்ளார்கள் அப்படி என்றார் மனிதர்களுக்கு தொழில் நுட்பத்தை கற்பித்தவர்கள் யார்?

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: