ஆர்டிக் பனி அதிகபட்ச வீழ்ச்சி!

Wednesday, September 21st, 2016

ஆர்டிக் பனி 2016 ஆம் ஆண்டில் வரலாற்றில் இரண்டாவது அதிகளவு சுருங்கி 2007 ஆம் ஆண்டு சாதனையை சமன் செய்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதியாகும் போது ஆர்டிக்கின் பனி சூழ்ந்த பகுதி 4.11 மில்லியன் சதுர கிலோமீற்றராக உள்ளது.

இது 2012 ஆம் ஆண்டு 3.39 மில்லியன் சதுர கிரோமீற்றர் அளவுக்கு சுருங்கிய சாதனையை விடவும் சற்றே அதிகமாகும்.

ஆர்டிக் கடற்பனி ஒவ்வொரு இலையுதிர் மற்றும் குளிர் காலத்திலும் விரிவடைந்து கோடை மற்றும் வசந்த காலத்தில் சுருங்கி வருகிறது. பூமியின் காலநிலை மாற்றத்தை கணிக்கு முக்கிய அளவு கோலாக ஆர்டிக் பனியின் மாற்றத்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆர்டிக் பனி குறித்து அமெரிக்க பனி மற்றும் பனிக்கட்டி தரவு மையம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகிறது.

coltkn-09-20-fr-03161828571_4781472_19092016_mss_gry

Related posts: