9 மி.மீ துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யத் தீர்மானம்!

Tuesday, January 22nd, 2019

9 மில்லிமீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதியை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மீண்டும் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்துத் துப்பாக்கிகளையும் பாதுகாப்பு அமைச்சில் சமர்ப்பிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியுள்ளார்.

புதிய அனுமதிப்பத்திரம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: