9 ஆவது நாடாளுமன்றுக்கு செல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட 23 முக்கிய பிரபலங்கள் – குழப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க!

Friday, August 7th, 2020

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த தேர்லில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆனாலும் 42 வருட அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எனினும் 8 ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 24 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

அந்தவகையில் –

ரணில் விக்ரமசிங்க, சதுர சேனரத்ன, விஜித் விஜயமுனி சோய்சா, சுனில் ஹந்துன்நெத்தி ரவி கருணாநாயக்க, நிரோஷன் பிரேமரத்னே, லக்ஷ்மன் யப்பா அபேவர்தன, வஜிரா அபேவர்தன, நலிந்த ஜெயதிஸ்ஸ, பாலித தேவரப்பெரும, சுசந்த புஞ்சினிலமே, நவின் திசாநாயக்க, தயா கமகே, அகிலா விராஜ் காரியவசம், அசோகா அபேசிங்க, ஜே.சி. அலவதுகொட, பாலித ரங்கே பண்டார, மனோஜ் சிறிசேன, தலதா அத்துகோரல, ஹிருனிகா பிரேமச்சந்திர, அர்ஜுன ரனதுங்க, ருவன் விஜேவர்தன, AHM பௌசி ஆகியோர் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது கல்விச் செயற்பாடுகளில் மும்  மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த வேண்டும்- யாழ். மாவட...
அரசின் பங்காளியாக செயற்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களிற்கு எதனையும் பெற்ருக்கொடுக்கவி...
மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வ...