8,400 ஊழியர்களை உறுதிப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Friday, December 1st, 2023

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அதிகளவான அரச ஊழியர்கள் பணியாற்றுவதாகவும், இந்த அமைச்சில் 495,000 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களில் 18 முதல் 20 வருடங்களாக நிரந்தர நியமனம் பெறாத பழைய ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் நிரந்தர நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: