80 வீதமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை  – ஊர்காவற்துறை பொலிஸார்!

Tuesday, November 14th, 2017

80 வீதமான மோட்டார் சைக்கிள்களுக்கு எவ்வித அனுமதிப்பத்திரமும் கிடையாது என ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்துறையில் குடிபோதையில் அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய பூசகர் ஒருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

பூசகர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதற்கு ஏதேனும் விசேட காரணங்கள் உண்டா என பொலிஸாரிடம், நீதவான் ஏ.எம்.ரியாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கடந்த காலங்களில் குடிபோதை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் பற்றிய விபரங்களை நீதிமன்றில் பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.

Related posts: