8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

Wednesday, February 6th, 2019

வறுமைக்  கோட்டின் கீழ் உள்ள, 8 இலட்சம் பேருக்கு, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிதாக சமுர்த்தி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சமுர்த்தி பயனாளிகளாக 1,385,516 பேர் இருப்பதாக, அவர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த பயனாளிகளில், 5 இலட்சம் பேருக்கு ஒரு வருட காலப்பகுதியில் தனியாக வாழ்க்கை நடத்தக்கூடிய வலுவூட்டல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: