741 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்!

Saturday, September 9th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 43 ஆயிரத்து 905 குடும்பங்கள் மீள்குடியேறியிருப்பதாகவும் 741 குடும்பங்களைச் சேர்ந்த 2422 பேர் மீள்குடியேற்ற வேண்டியிருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவிததுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து வெளியிடும் போது இந்த புள்ளிவிபரங்களை குறிப்பிட்டார்.கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி கண்டாவளை, பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுகளில் 43 ஆயிரத்து 905 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 169 பேர் மீள்குடியேறியிருப்பதாகவும் மேற்படி நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 741 குடும்பங்களைச் சேர்ந்த 2422 பேர் மீள்குடியேற்றத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 24 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 537 பேரும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 8319 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 974பேரும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 7438 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 909 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 3957 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 749 பேரும் மீள்குடியேறியுள்ளனர்.இதேவேளை கரைச்சிப் பிரதேசசெயலர் பிரிவில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேரும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேரும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 357 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 247 பேரும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் 233 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேரும் மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்துள்னர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: