7 இலட்சத்துக்கு அதிகமான வழக்குகள் நிலுவையில் : நீதி அமைச்சர் தலதா அத்துகோரள!

Friday, October 5th, 2018

வழக்குகள் பிற்போடப்படுவது தொடர்பில் எங்களால் திருப்தியடைய முடியாது. ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

இவ்வாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 28 ஆவது தேசிய இணக்க தினம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. அதில் மேலும் தெரிவித்ததாவது:

இற்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இணக்க முறைமை ஊடாக பெரிய சேவை இடம்பெற்றுவருவது தொடர்பில் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டால் சமூகத்துக்குள் எவ்வாறான நிலமை ஏற்படும் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது.

இன்று நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியுள்ளன. இதுதொடர்பாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். வழக்குகள் பிற்போடப்படுவது தொடர்பில் எங்களால் மகிழ்ச்சியடைய முடியாது என்றார்.

Related posts:

வட மாகாணத்தில் மலேரியா தொற்று அதிகரிக்கும் அபாயம் - பிராந்திய மலேரியா தடை இயக்க பொறுப்பு வைத்திய அத...
ஞாயிறு நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு - 5 ஆம் திகதி வரை அமைதிக் காலம் என்கிறார் தேர்தல்கள் ஆ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம் - ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ர...