63 தொழிற்சங்கங்கள் சைட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு முடிவு!

Friday, March 31st, 2017

மாலபே சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் 63 தொழிற்சங்கங்கள் குதிக்கவுள்ளன என்று அரச மருத்தவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்க ஆதரவு தெரிவித்து இலங்கையின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 63 தொழிற்சங்கங்களும் கைக்கோர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்தவர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்ற போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது, இந்த மாத இறுதிக்குள் சைட்டம் கல்லூரிப் பிரச்சினை குறித்து அரச கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக அரச முடிவு எதையும் எடுக்காவிடின், எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் நளிந்த ஹேரத் கூறினார்.

Related posts: