6 இலட்சத்து 77,139 விவசாயிகளுக்கு 22 ஆயிரத்து 644 மெட்ரிக் தொன் TSP உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, April 7th, 2023

677,139 விவசாயிகள் 22,644 மெட்ரிக் தொன் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் உரத்தை சிறு போகத்தில் இலவசமாகப் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட TSP உர இருப்புக்களை பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த கமநல சேவை நிலையங்களில் பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 10ஆம் திகதிக்குப் பின்னர் கமநல சேவை நிலையங்களில் உள்ள அனைத்து TSP உரக் களஞ்சியங்களும் பிரதான களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

லங்கா உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் கம்பனி ஆகியவற்றினால் நாடு முழுவதிலும் உள்ள கமநல சேவை நிலையங்களுக்கு 36,000 மெட்ரிக் தொன் TSP உர இருப்புக்கள் சிறு போகத்திற்காக விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை - ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளா...
இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றால் சில சட்டங்களை நாம் கொண்டுவர வேண்டும் - நாடாளுமன்ற உறுப்...
வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீ...