527 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Monday, December 24th, 2018

மனித நடவடிக்கைகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

கடந்த இரண்டு வருடங்களில் 527 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக, வனஜீவிகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிக எண்ணிக்கையான யானைகள், யானை வெடிகளாலும் மற்றும் துப்பாக்கிச்சூடு, மின்சார தாக்கம், தொடருந்தில் மோதல் உள்ளிட்ட காரணங்களாலும் உயரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 271 யானைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளன.

Related posts: