5 மாதங்களில், 5 இலட்சத்து 24 ஆயிரத்து 486 சுற்றுலாப் பயணிகள் வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தகவல்!

Sunday, June 4th, 2023

இந்த ஆண்டின், முதல் 5 மாதங்களில், 5 இலட்சத்து 24 ஆயிரத்து 486 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வந்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம், 83 ஆயிரத்து 309 வெளிநாட்டவர்கள், சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம், 30 ஆயிரத்து 207 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, இந்த ஆண்டில், குறித்த காலப்பகுதியில், சுற்றுலாவில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, 175.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: