5 மாதங்களில் 120,000 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு பயணம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022

வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இது 100% அதிகரிப்பு என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்களரந்தெனிய தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் 122,000 பேர் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இவ்வருடம் 300,000 பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக தற்போது பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

தேவையான மொழி தேர்ச்சி உள்ளிட்ட தகுதி சான்றிதழ்கள் இருப்பின், அவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: