40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் – உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று இன்று (21) காலை தீயில் எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்த போதிலும், உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தீ பரவியவுடன் பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேறியதாகவும், இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த குறித்த பேருந்தின் முன்பகுதி, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டபோது தீப்பிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத அதேவேளை, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: