40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை!

Sunday, June 19th, 2016

40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜீப் ரக வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சுக்களின் கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஜீப்கள் வழங்கப்பட உள்ளன.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அண்மையில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குத்தகை அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்பட உள்ளதுடன் வாகனங்கள் வழங்கப்படும் வரையில் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் தலா இரண்டு லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

இதற்கு மேலதிகமாக காரியாலய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இதுவரையில் வழங்கப்பட்ட மூன்றரை லட்ச ரூபா ஐந்து லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. மொத்த தொகையில் 20 வீதத்தை மீள அறவீடு செய்யும் அடிப்படையில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: