40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பு தொடர்பில் வெளியாகிறது வர்த்தமானி – கையொப்பமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, July 27th, 2021

இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் 5 ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலம் இன்னும் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவில்லை.

நாட்டின் கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டயார் சதுப்புநிலம் காணப்படுகின்றது.

அதில் 80 சதவீதமானவை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: