373 கடற்படையினருக்குக் கொரோனா தொற்று: 14 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைவு – கடற்படை ஊடகப்பிரிவு!

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 373 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
தொற்றுக்குள்ளாகியுள்ள கடற்படையினரில் இதுவரை 14 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது.
இவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனைக்கு அமைய இவர்களை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கான அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். விஜயம்!
பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணம்!
விசேட தேவையுடையவர்கள் குறித்து கவனம் தேவை – தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர்!
|
|