3 மாகாணங்களின் தேர்தல்கள் மார்ச் மாதத்திற்கு முன்னர் – பிரதமர்

Thursday, September 21st, 2017

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களின் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று மாகாண சபைகளின் ஆயுட்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களையும் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts: