29 ஆயிரத்து 34 வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவு – வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
Sunday, August 20th, 2023நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாத்திரம் 29 ஆயிரத்து 34 வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 37 ஆயிரத்து 179 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 8 ஆயிரத்து 145 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் அவற்றை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு அதிகார சபையினால் உரிய நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விரைவில் பாவனைக்கு வருகின்றது மின்சார ரயில்!
நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கம் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
தற்போதைய ஆட்சி முறையையும், அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் - பிரதமர் தினேஷ் க...
|
|