21 ஆம் நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக முரளி – விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை!

Monday, June 29th, 2020

21வது நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக, உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய முத்தையா முரளிதரனை விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை பெயரிட்டுள்ளது.

CricViz எனும் கிரிக்கெட் ஆய்வு நிலையத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள 30 வீரர்கள் உள்ளடங்கிய பட்டியலில் முன்னிலையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இடம்பிடித்துள்ளார்.

குறித்த பட்டியலில் 2000ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலான கிரிக்கெட் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

முரளியின் டெஸ்ட் விக்கெட்டுக்கள் 800 இன் 573 ஆனது 2000 ஜனவரி 1ஆம் திகதிமுதல் 2010ஆம் ஆண்டு வரையில் 85 போட்டிகளில் கைப்பற்றியுள்ளது விசேடமானதென்பது குறிப்பிடத்தக்கது

Related posts:

இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் - அரசாங்கக் கணக்குகள் பற்...
மின்சாரசபையின் கணக்கீடுகள் தவறானவை - கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆ...
ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்ப...