2020 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான விசேட அறிவித்தல்!
Friday, March 11th, 20222020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், செய்முறை பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த விண்ணப்பங்கள், எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இணையவழி நிகழ்நிலை முறைமை ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும்போது, https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து, எமது சேவை என்பதன் கீழுள்ள நிகழ்நிலை விண்ணப்பபடிவம் ‘பாடசாலைப் பரீட்சைகள்’ என்பதை அழுத்துவதன் மூலமும், அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலி பிரயோகமான, DOE இற்கு பிரவேசித்து, ‘நிகழ்நிலை விண்ணப்பப்படிவம் பாடசாலை பரீட்சைகள்’ என்பதை அழுத்துவதன் மூலமும் அல்லது https://onlineexams.gov.lk/ என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலமும் விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுமுடியும்.
விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்துவதற்கு முன்னர், தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், பொது அறிவுறுத்தல்கள் என்பனவற்றை வாசித்தல் மற்றும் காணொளியை பார்த்தல் என்பனவற்றின் மூலம் சரியான முறையில் விண்ணப்பங்களை பூரணப்படுத்துவது அவசியமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கொவிட் பரவல் காரணமாக, இந்த முறை பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு அதிபர் உறுதிப்படுத்தல் கையொப்பம் அவசியமில்லை என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|