2018 ஆம் ஆண்டிற்கான ‘விருந்தக கண்காட்சி’!

Tuesday, June 26th, 2018

2018ஆம் ஆண்டிற்கான ‘விருந்தக கண்காட்சி’ எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு இலங்கை விருந்தக பாடசாலை பட்டதாரிகள் சங்கம் மற்றும் அரச தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் இந்தியா, மாலைதீவு, சீஷெல்ஸ், மற்றும் பல தெற்காசிய நாடுகளும் பங்கு கொள்கின்றன. அத்துடன் சர்வதேச ரீதியாக பல நாடுகள் தமது விருந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல பொருட்களை கொண்ட காட்சியகங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த கண்காட்சி மூலம், விருந்தகம் தொடர்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் புரியும் பலர் தமது உற்பத்தி மற்றும் சேவை என்பனவற்றை வழங்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் பிரபல சமையல் கலை நிபுணர்கள் புது விதமான உணவு வகைகளை தயாரிக்கும் முறை தொடர்பாக செய்முறை விளக்கத்துடன் வழங்கவுள்ளனர்.

Related posts:


அமைச்சர் ராஜிதவின் பிரதி தலைவர் பதவி தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக...
சீரற்ற வானிலை : யாழ்ப்பாணத்தில் 93 குடும்பங்கள் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப...
உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர...