20 மில்லியன் டொலர் உதவி வழங்கியது – அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
Wednesday, June 29th, 2022இலங்கைக்கும் மேலதிகமாக 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியமைக்காக அமெரிக்காவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பிற்காக மேலதிகமாக 20 மில்லியன் டொலரை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று ஜீ 7 மாநாட்டில் அறிவித்தார்.
இவை எதிர்வரும் 15 மாதங்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள், 27 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்தான உணவை வழங்க இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உடன் அமுலுக்கு வரும் வகையில் 58 காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சமுர்த்தி கொடுப்பனவிற்காக 44 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
இந்த வருடத்தின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் - தேர்தல்கள் ஆணைக்குழு...
|
|