20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் – அரசாங்கம் தீர்மானம்!
Saturday, September 26th, 2020நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் நாடாளுமன்றம் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒரு வருடத்திற்குப் பிறகு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
எனினும் இதில் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு இரண்டரை ஆண்டு வரம்பு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தில் மீண்டும் உறுதிமொழியைச் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஷக்கடிக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில்!
மாகாண சபை தேர்தல்: மகிந்த விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
சிக்கல்களை ஏற்படுத்திய மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
|
|