2 ஆம் தவணைக்குப் பின்னர் மாணவர்களுக்குச் சீருடை!

Thursday, July 26th, 2018

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான சீருடை வவுச்சர் இரண்டாம் தவணை விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.

43 இலட்சம் பாடசாலை மாணவர்களும் பிரிவெனாக்களில் கல்வி பயில்வோரும் தேவையான சீருடைத்துணியை வவுச்சர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த முறையைப் போன்று இந்த முறையும் வவுச்சர் நடைமுறை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. தேவையான நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் ஒருவருக்கு நிதி சுயாதீனக்குழு மூலம் தீர்மானிக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: