1900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த ஆண்டில் வெங்காயச் செய்கை!

Friday, May 4th, 2018

யாழ். குடாநாட்டில் விவசாயிகள் இந்த ஆண்டில் ஆயிரத்து 900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கையில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கடும் வறட்சி வெப்பத்தினால் வெங்காயச் செய்கைக்கு உகந்த மாதம் இல்லாத காரணத்தினால் கூடுதலாக வைகாசி மாத பிற்பகுதியிலேயே இந்த சிறுபோக செய்கைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கென செய்கையாளர்கள் தமது விவசாய நிலங்களை உழுது பசளை போட்டும் தயார்படுத்தி வருகின்றனர். சிறுபோக செய்கைக்கு வெங்காய விதைகளுக்கு தட்டுப்பாடும் பற்றாக்குறையும் நிலவுவதால் கூடுதலாக விவசாயிகள் உண்மை விதைகள் மூலம் நாற்று மேடை அமைத்து அதன் ஊடாக செய்கையில் ஈடுபடவும் உள்ளார்கள் என்று விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

இதேசமயம் தற்போதும் குடாநாட்டின் சில இடங்களில் விவசாயிகள் கடும் வறட்சிகளையும் பொருட்படுத்தாது வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, ஊரெழு, புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய், அச்செளு, நாவற்குழி போன்ற இடங்களில் செய்கையாளர்கள் சிலர் இந்த வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: