160 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை பாராட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச்சபை மேலும் 162 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இலங்கைக்கான மூன்றாண்டு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இத்தொகை வழங்கப்படுகிறது. நிறைவேற்று சபையின் பதில் தலைவர் தாவோ செங்க் இது தொடர்பாக தெரிவிக்கையில் சவால்களுக்கு மத்தியில் இலங்கை அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி பாராட்டத்தக்கது. அனைத்து பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்களில் ஸ்திரத்தன்மை காணப்படுவதாகவும், பண வீக்கம் வீழ்ச்சியடையும் நிலையை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று வருட திட்டத்தின் கீழ் நாணய நிதியம் ஒன்று தசம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு கடந்த ஜூன்மாதத்தில் தீர்மானித்திருந்தது இலங்கைக்கு இதுவரை நாணய நிதியம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|