15 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி – இவ்வாரம் ஜனாதிபதி ஆலோசனை வழங்குவார் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, October 4th, 2021

நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளார் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

12 முதல் 19 வயதிற்குட்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சகலருக்கு தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: