1 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!

Monday, June 24th, 2019

இலங்கையின் மேலும் ஒரு அபிவிருத்திக்கு சீன அரசாங்கம் கடன் உதவி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்காக 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது.

இந்த திட்டத்துக்கு 1.1 பில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 85 வீதத்தை, சீனாவிடம் கடனாகப் பெறவும், 15 வீதத்தை, உள்நாட்டு வங்கிகளிடம் அரசாங்கம் திரட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டமாக, 37.09 கி.மீ தூரமுள்ள பகுதியை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான, பகுதியை அமைக்கவே, சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியே (எக்சிம் வங்கி) இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புச் செய்யும் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் – மேதின செய்திய...
வீதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்புக்கு ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே காரணம்...
பயணிகளுக்கு சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வசதியுடன் கூடிய பயண அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் அனைத்...