வேட்பு மனு நாளன்று 1700 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Saturday, October 5th, 2019


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 7 ஆம் திகதி அன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலக பகுதியில் பாதுகாப்பிற்காக சுமார் 1,700 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமாக ருவான் குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அன்றைய தினம் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தில் ஊர்வலம் முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்காக தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஆதரவாளர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு இதற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸாரை கொண்ட குழுவொன்று தேர்தல் அலுவலகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இதன் பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் பீரீஸ், பொலிஸ் அத்தியகட்சகர் ஒஷான் ஏவவித்தாரண ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினத்தன்று அதாவது எதிர்வரும் திங்கட் கிழமை விஷேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: