விசாரணையின் அடிப்படையில் ஆயுதங்கள் மீட்பு!

Tuesday, August 27th, 2019


பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த AK 47 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மெகசின்கள் இரண்டும், அதற்கான தோட்டாக்கள் 120 ம், கைக்குண்டுகள் 11 ம் மற்றும் PE 10 என சந்தேகிக்கும் வெடிபொருட்கள்  10 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் தொலைநோக்கு உதாரணம் உட்பட பல்வேறு பொருட்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டின்கீழ் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: