வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய!

Wednesday, December 18th, 2019


நாட்டிலுள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

அதற்கமைய வறிய குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தொழில்வாய்ப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தொழில் வழங்குவதற்கு அவர்களின் தகைமைகள் ஆராயப்படாது எனவும், அவர்களிடம் உள்ள தகைமைக்கு அமைய, வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் சரத் அமுனுகம குறிப்பி;ட்டார்.

வறிய குடும்பங்களுக்கு குறைந்தது மாதம் 25 ஆயிரம் ரூபாவை இதன் மூலம் வருமானமாக பெறக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: