யாழ் சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள செயற்பாடுகள் ஆரம்பம்!

Wednesday, October 16th, 2019


யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தி ன் பணிகள் நேற்றய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Air India Alliance இந்திய விமானம் நேற்றையதினம் அங்கு தரையிறங்கிய நிலையில் வானூர்த்தியில் வந்தவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களின் கடவுச்சீட்டுக்களில் நுழைவுவிசா அனுமதி முத்திரை குத்தப்பட்டதுடன் மாலை இந்தியா திரும்பியபோது வெளியேறியமைக்கான முத்திரையும் கடவுச்சீட்டுக்களில் பொறிக்கப்பட்டது.

அதேவேளை விமான நிலையத்தின் பயணிகளுகள் சேவைக்கு ஏற்ற தகுதி நிலைமைகள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை விமான நிலைய கட்டங்கள், மின்சார வசதிகள், கட்டுமானப்பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவுசெய்யப்படவில்லை.

இந்த நிலையில் அவற்றை நிறைவு செய்யும் வேலைகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்ற நிலையில் சுமார் 10 தினங்களில் அவை நிறைசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts: