மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
Wednesday, September 18th, 2019
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று (18) அழைக்கப்பட்டுள்ளார்.
மின்சார சபைக்கு மேலதிகமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை மற்றும் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான சாட்சிகளைப் பதிவுசெய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி செயலணியின் கொள்கைவகுப்பு மேன்முறையீட்டு சபையின் தலைவர் K.A. சோமசிறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மின்சாரக் கொள்வனவின்போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
பல்கலை கல்விசாரா ஊழியர்களுடன் இன்று பேச்சு!
வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா விசேட ஆராய்வு!
|
|
|


