மாலை 6 மணிக்கு கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பு !

Friday, October 4th, 2019

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தொடர்பாக சகல தரப்பினரும் தங்களது ஆவணங்களை இன்று (04) பிற்பகல் 3.15 க்கு முன்னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பு இன்று (04) மாலை 6 மணிக்கு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts: