மழை பெய்வதற்கு சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!

Sunday, October 6th, 2019

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான பொறிமுறை இன்று வெளியீடு!
இவ்வாண்டில் பொலிஸாருக்கு எதிராக 1,474 முறைப்பாடுகள் பதிவு!
தொற்றாநோயை 5 சதவீதமாக குறைப்பதே எதிர்காலதிட்டம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பு தொடர்பில் கருத்தரங்கு!
சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்குச் சிறை -  யாழ். மேல் நீதிமன்று தீர்ப்பு