மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Tuesday, January 14th, 2020
மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய மன்னாரில் இயற்கை எரிவாயுவிற்கான அகழ்வு நடவடிக்கையை வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் கடற்படுக்கையில் 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தடவையாக கூடுகிறது தேசிய சபை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்...
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு - மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என ...
|
|
|


