மக்களின் விருப்பத்திற்கமையவே நாட்டை நிர்வகிப்பேன் – மஹந்த ராஜபக்ச!

Monday, October 14th, 2019


மக்களின் விருப்பத்திற்கமையவே நாட்டை நிர்வகிக்கவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கடந்த 5 வருடங்களாக இந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை மாத்திரமே மேற்கொண்டது.

பழிவாங்கல்களுடன் நிறுத்தமால் அடுத்த தேர்தலின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை அந்த கட்சியின் செயலாளர் கோருகிறார்

அதனைவிடுத்து மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களை ஆதரிக்குமாறு எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான நாடொன்றை கட்டியெழுப்புவதே தமது பிரதான நோக்கம் என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான, ஒழுக்கமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.அரசியல் கலாசாரத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும்.எதிர்தரப்பினரின் சூழ்ச்சிகளுக்குள் சிக்கி அநாகரிகமான முறையில் நடந்துக்கொள்ள கூடாதுதங்களது சிறந்த கொள்கை காரணமாகவே பல முக்கிய கட்சிகள் தங்களுடன் கைகோர்த்துள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தங்களுக்கு மேலும் சக்தியை வழங்குகிறது.அவர்களை கௌரவத்துடனும் ஆதரவுடனும் நாங்கள் அரவணைத்துக் கொள்கின்றோம் என்றார்.

Related posts: