பெற்றோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

Sunday, September 22nd, 2019

பாடசாலைகளில் பிள்ளைகளை சோ்த்துக் கொள்வதற்காக பெற்றோகளிடம் பணம் கேட்கப்பட்டால் உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.இந்து கல்லுாாி அதிபா் மாணவா்களை உள்ளீா்ப்பதற்காக லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வடமாகாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக இவ்வாறு லஞ்சம் பெறப்படும் விடயம் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் தரம் 1ல் மாணவா்களை சோ்ப்பதற்காக பல பாடசாலைகள் பெற்றோருக்கு நோ்முக தோ்வுகளை நடாத்திவருகின்றது. அத்துடன் தரம் 6ல் மாணவா்களை சோ்ப்பதற்கான காலமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் பாடசாலையில் லஞ்சம் கேட்கப்பட்டால் உடனே 1954 எனும் இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: