பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கைது!

Wednesday, October 9th, 2019


கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளளதுடன் அவர்களை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

முன்னதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இரத்துச் செய்து இன்று உத்தரவிட்டிருந்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி, பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த திருத்த மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளளார்.

Related posts: