புகையிரத சேவை தொடர்பில் மீண்டும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Thursday, August 29th, 2019


புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைச் சட்டத்தின்படி, புகையிரத சேவையை நேற்றிலிருந்து (27) அத்தியாவசிய சேவையாக அறிவித்து இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய பயணிகள் மற்றம் அனைத்து விதமான பொது போக்குவரத்து சேவைக்கான புகையிரத சேவைகள், புகையிரதங்களின் பராமரிப்பு மற்றும் சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட புகையிரத துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் உள்ளடங்கும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதமும் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசெட வர்த்தமானியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts:

இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்...
நெல் செய்கையினால் பாரிய நட்டம் - துயருற்ற விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ...