புகையிரத சேவையை நிறுத்தியது பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பதற்றம்!

Friday, August 9th, 2019

காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பை வெளியிட்டு வரும் பாகிஸ்தான், டெல்லி ௲ அடாரி இடையே சேவையில் ஈடுபடும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. அதன்பின், காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது.

தற்போது டெல்லியில் இருந்து அட்டாரி வரை இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்த ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது. வாகா எல்லையில் குறித்த இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என இந்தியன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: